தமிழகம் முழுவதும் அல்ல இந்தியா முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவாக உள்ளதால் பொறியியல் கல்லூரிகள் பெரும் வேலை வேலைகுறைப்பை செய்து வருகின்றனர்.
ஏன் மாணவர்களிடயே பொறியியல் ஆர்வம் குறைந்து விட்டது என்று பலவிதமான ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும் யதார்த்த நிலையில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் தாங்கள் செய்ய வேண்டியதை செய்யவேண்டியதை செய்யாமல் மறந்து விட்டனர்.
ஆம் தொழில்நுட்பத்தில் நாள் தோறும் பல புதுமைகள் புகுத்தப்பட்டு உள்ள நிலையில் அதற்கேற்றார்போல் பாடத்திட்டங்களை உருவாக்கி புதிய நுட்பங்களுக்கு ஏற்றார்ப்போல் மாணவர்களுக்கு அறிவுத்திறனை உட்டவேண்டியது அவசியம். ஆனால் நிறுவனங்களில் காசு கொடுத்து வாங்கிய திட்டப்பணிகளுக்கு அங்கிீகாரம் கொடுத்ததால் மாணவர்கள் தங்கள் திறமையை மேம்படுத்தமுடியாத நிலையை ஏற்படுத்திவிட்டனர்.
உதாரணத்திற்கு
R மொழி கணினியில் பல புதுமைகளை புகுத்தி வருகிறது. புள்ளியியல் விபரங்களை வரைபடமாக செயலாக்கிகாட்டுவதில் இதன் பலன் அதிகமே. இது எத்தனை ஆசிரியர்களுக்கும், மாணவர்களக்கு தெரியும் ?
Bigdata - பெருந்தரவு தகவல்களை ஆராயும் இந்த நுட்பம் இன்று அதிவேகமாக எல்லாத்துறைகளிலும் பயன்பட்டுவருகிறது.
Artificial Intelligence
செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்கால உலகமே இயங்க உள்ளது. வரும் காலத்தில் மொழியியல் செயற்கை நுண்ணறிவு, மருத்துவ செயற்கை நுண்ணறிவு என்று எத்தனை துறைகள் உள்ளதோ அந்தத் துறைகள் எல்லாவற்றிலும் செயற்கை நுண்ணறிவுத்துறை வரும், எனவே இப்போதிருந்தே நிறுவனங்கள் அதற்கேற்றார் போல் செயல்பட வேண்டும்.
IOT : பொருட்களின் இணையம்
இந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்மார்ட் சிட்டியின் முதுகெலும்பே இந்த பொருட்களின் இணையமே. நீர், நிலம், காற்று, வானம், பூமி ஆகிய ஐம்பூதங்களும் இந்த தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைக்கப்படும்.
ரோபாடிக்ஸ்
இந்தத்துறை ஏற்கனவே வளர்ந்து வந்தாலும் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளனர். இந்தத்துறையில் IOT தொழில்நுட்பம் இந்த துறைக்கு மிகவும் பயன்படும். பல நிறுவனங்கள் ரோபாட்களுக்கான மென்பொருட்களை வௌியிட்டுள்ளன.
எல்லாவற்றையும் விட கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பட்டறிவை(அனுபவ அறிவு) கொடுப்பது அவசியம்.
நிறுவனங்களில் காசு கொடுத்து வாங்கு செயல்திட்டத்தை விட்டுவிட்டு உடனடியாக தங்கள் மாணவர்களை எல்லா தொழில்துறையோடு இணைந்து பணியாற்ற செய்வது அவசியம். அடுத்த 5 ஆண்டுகளில் உலகம், இந்தியா அல்லது பொது சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை என்னவென்று இப்போதே கண்டெடுத்து அதற்கான வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்பது மிகவும் அவசியமானது.
தொடரும்….
செல்வ.முரளி